தலைப்புச் செய்திகள்

“அடக்குமுறையை நிறுத்து”: தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

– பாறுக் ஷிஹான் –

தமக்குரிய அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரியும், இட நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி –  ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்,  தீப்பந்தம் ஏந்தியவாறு – பல்கலைக்கழக முன்றலில் இன்று (12)  இரவு 7.30 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு கோசங்களை எழுப்பினர்.

பல்கலைக்கழகத்துக்கு முன்னாலுள்ள பிரதான வீதிக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தீப்பந்தம் ஏந்தியவாறு பல்கலைக்கழக வளாகத்தினுள் சென்றனர்.

இதன்போது; ‘போலித் தீர்வுகள் வேண்டாம்’, ‘விடுதி வசதிகளை விரிவுபடுத்து’, ‘தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் பல்கலைக்கழகத்தினுள் உடனடியாக  அழைக்கவும்’, ‘மாணவர்களை துன்புறுத்தாதே’, ‘மணவர்கள் மீதான அடக்கமுறைகளை நிறுத்து’ – போன்ற சுலோகங்களை ஏந்திய வண்ணம், மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.