தலைப்புச் செய்திகள்

09ஆம் திகதி தொடக்கம் 440 தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை சுங்கம் தெரிவிப்பு

ந்தியாவில் இருந்து 440 மெற்றிக் தொன் அரிசியை – 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09ஆம் திகதி முதல், தனியார் துறை இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான சுங்க வரி 15 ரூபாவினால் குறைக்கப்பட்டால், அரிசியை அதிகபட்ச விலையில் விற்க முடியும் என்று, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் நாட்டு அரிசியை சுமார் 220 ரூபாய்க்கு வழங்க முடியும் என, இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன கூறியுள்ளார்.

மேலும், அரிசி மொத்த சந்தைக்கு விநியோகிக்கப்படும் போது – ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 8% முதல் 10% வரை அதிகரிக்டகும் என்றும் அவர் விளக்கினார்.