தலைப்புச் செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலுக்கு நால்வர் நியமனம்: மு.காங்கிரஸ், மக்கள் காங்கிரஸுக்கும் வாய்ப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்களுக்கு, அந்தக் கட்சியின் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த மூவர் உள்ளடங்கலாக நால்வரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிசாம் காரியப்பர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக எம்.ஐ. முத்து மொஹமட் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரின் பெயர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இம்முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 05 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேசியப் பட்டியல் உறுப்பினராக இதற்கு முன்னர் பெயரிடப்பட்டிருந்தார்.