
ஜனாதிபதித் தேர்தலில் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சஜித் பிரேமதாசவை விடவும் அனுர குமார திசாநாயக்க 13 லட்சம் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளமையினால் குழப்பமடையத் தேவையில்லை என, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமுன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார.
இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தில் எளிமையான நிகழ்வில் அனுர குமார திசாநாயக்க பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய ஜனாதிபதி தனது முதல் நிர்வாக நடவடிக்கையாக – ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் 15 அமைச்சு செயலாளர்களை தற்காலிகமாக நியமிப்பார் என, தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சமந்த வித்யாரத்ன கூறியுள்ளார்.



