தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் நாமலுக்கும் அரியநேந்திரனுக்கும் போட்டி

ஜனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்ட பா. அரியநேந்திரன் 226,342 வாக்குகளைப் பெற்று, 05ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

38 வேட்பாளர்கள் போட்டியிட்ட ஜனாதிபதித் தேர்தலில் – அனுர குமார திசாநாயக்க, சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நாலாவது இடங்களைப் பிடித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் 04ஆவது இடத்தைப் பிடித்துள்ள பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ 03 லட்சத்து 42 ஆயிரத்து 781 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அந்த வகையில் 04ஆவது இடத்தைப் பெற்றுள்ள நாமலை விடவும் அரியநேந்திரன் 116,439‬ வாக்குளை குறைவாகப் பெற்றுள்ளார்.