தலைப்புச் செய்திகள்

தேர்தலை கண்காணிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு; ஐரோப்பிய ஒன்றியத்தவர்கள் வந்துள்ளதாகவும் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலை அவதானிக்க 12 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த பிரதிநிதிகளில் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் பிரதிநிதிகளும் தேர்தலை அவதானிப்பதற்காக வருகை தரவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே இலங்கை வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வாக்களிப்பு நடவடிக்கைகள் உட்பட அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் பொறுப்பு – சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் விரிவான அறிக்கையை வழங்குவார்கள் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர மேலும் தெரிவித்தார்.