ரணில் சுயேட்சையாகப் போட்டியிடுவதன் மூலம் பலன்களைப் பெற முடியாது: பேராசிரியர் ஜயதேவ உயங்கொட

🕔 August 24, 2024

ணில் விக்ரமசிங்க சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள போதிலும் உண்மையில் அவர் சுயேச்சை வேட்பாளர் அல்ல என அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க பிபிசி சிங்கள சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

“ரணில் உண்மையில் சுயேச்சை வேட்பாளர் அல்ல. அவரைச் சுற்றி பல அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால் அந்த கட்சிகள் அனைத்தும் மக்களால் நிராகரிக்கப்பட்ட பலவீனமான கட்சிகள்.” என்கிறார் அவர்.

ரணில் விக்ரமசிங்க சுயேச்சை வேட்பாளராக நிற்பது அவருக்கு சாதகமாக இருப்பதாகத் தோன்றினாலும் – அதில் உண்மையில்லை என கலாநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார்.

இதேவேளை, ”சுயேச்சையாகப் போட்டியிடுவதன் மூலம் அவர் குறிப்பிடத்தக்க பலன்களைப் பெறுவார் என்று எதிர்பார்க்க முடியாது” என, பேராசிரியர் ஜயதேவ உயங்கொட தெரிவித்துள்ளார்.

ஆனால், ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பதிலாக சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவது மிகவும் சாதகமானது என அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.

சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டதன் காரணமாக ரணில் விக்ரமசிங்க பல கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ளதாக பிபிசி சிங்களத்திடம் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்