
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக – பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ஷவின் சார்பில் இன்று (14) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் – இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணத்தை செலுத்தினார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக பொதுஜன பெரமுன இம்மாதம் அறிவித்தது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக சமபிம கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்ஷ என்பவருக்காக – ஹேமந்த விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று மாலை வரை மொத்தம் 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கான இறுதித் தினம் இன்றாகும்.



