
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மேலும் மூன்று வேட்பாளர்கள் இன்று (05) பண வைப்புத் தொகையை செலுத்தியுள்ளனர். இதன்படி மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.
சிறிபால அமரசிங்க, சரத் பொன்சேகா (சுயேச்சை வேட்பாளர்) மற்றும் கே.ஆர். கிருஷ்ணன் (அருணலு ஜனதா பெரமுன) ஆகியோர் இன்று கட்டுப்பணம் செலுத்தியதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன, கே.கே. பியதாச, முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி. லியனகே, சஜித் பிரேமதாச, பி.டபிள்யூ.எஸ்.கே. பண்டாரநாயக்க, அஜந்த டி சொய்சா, சிறிதுங்க ஜயசூரிய, கே. ஆனந்த குலரத்ன,சரத் மனமேந்திர, அக்மீமன தயாரத்ன தேரர் மற்றும் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் ஆகியோர் ஏற்கனவே கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஓகஸ்ட் 14ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும். அதன் பின்னர் ஓகஸ்ட் 15ம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும். செப்டம்பர் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



