தலைப்புச் செய்திகள்

ரணிலுக்கு ஆதரவு கோரி, மஹிந்த வீட்டில் சந்திப்பு

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவை வழங்குகுமாறு அந்தக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஜனாதிபதியின் பணியாளர்கள்பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோர் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரின் இல்லத்தில் சந்தித்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

பொதுஜன பெரமுன கட்சியின் செயற்குழு கூட்டம் திங்கட்கிழமை கூடவுள்ளளதாகவும், அதன்போது இது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் – முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ அவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றுக்கு தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.