தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல்: தபால் செலவு 1.4 பில்லியன் ரூபாய் என அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் திணைக்களத்தின் செலவாக 1.4 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்கவிடம் இந்த விபரத்தைக் கூறியுள்ளார்.

சாதாரண தபால், பதிவுத் தபால், எழுது பொருட்கள், போக்குவரத்து, நிர்வாகக் கட்டணம் உள்ளிட்ட பல செலவுகளுக்க இந்தத் தொகை மதிப்பீடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தபோதிலும், இந்த மதிப்பீடு ஒரு முன்னறிவிப்பு மட்டுமே என்பதால், கோரப்பட்ட பணத்தில் மாற்றம் ஏற்பட சந்தர்ப்பம் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.