தலைப்புச் செய்திகள்

உறுதிப்படுத்தினார் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்கான கட்டுப் பணத்தை ஏற்கனவே கட்டியுள்ளதாகவும் காலி மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்ற ‘ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்’ பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இளைஞர்களுக்கான சிறந்த இலங்கையை உருவாக்க அனைத்து அரசியல்வாதிகளும் அரசியல் பேதங்களை விடுத்து ஒன்றிணைய வேண்டுமெனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்

சர்வதேச நாணய நிதியத்துடனான தற்போதைய உடன்பாடுகளை முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்றும், அந்த வரைவுக்கு முரணாக செல்ல முடியுமென யாராவது கூறினால், அவர்கள் நாட்டை ஆபத்தில் தள்ளிவிடும் பொய்யைச் சொல்கிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நேற்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, ரணில் விக்ரமசிங்க சார்பில், சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா கட்டுப் பணத்தை செலுத்தியிருந்தார்.