அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பணத்தில், கெஹலியவின் கைப்பேசிக் கட்டணத்தை சட்ட விரோதமாக செலுத்திய வழக்கு ஒத்தி வைப்பு

🕔 February 9, 2023

மைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி – கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.

அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்தி அமைச்சரின் ஒரு மாத கையடக்கத் தொலைபேசி கட்டணத்தைச் செலுத்தியதன் மூலம், அரசாங்கத்துக்கு சட்டவிரோதமாக 230,984 ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மேற்படி இருவருக்கும் எதிராக, லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் – இந்த ஊழல் வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

கெஹலிய ரம்புக்வெல்ல 2012ஆம் ஆண்டு வெகுஜன ஊடக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், இந்த மோசடி நடந்ததாகக் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்