ராஜாங்க அமைச்சர் டயானாவுக்கு எதிராக, பிடியாணை இன்றி நடவடிக்கை எடுக்க முடியும்: நீதிமன்றம் தெரிவிப்பு

🕔 February 9, 2023

ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, குடிவரவு – குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்களைப் புரிந்துள்ளதாக கூறப்பட்டால், அவருக்கு எதிராக – நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை இன்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுக்க முடியும் என கொழும்பு பிரதான நீதவான் தெரிவித்துள்ளார்.

ராஜாங்க அமைச்சர் டயானா கமகே – வெவ்வேறான இரண்டு பிறப்புச் சான்றிதழ்களை சமர்ப்பித்து, இலங்கை கடவுச்சீட்டைப் பெற்றுள்ளார் என்பதற்கு போதிய சாட்சியங்கள் நீதிமன்றில் இருப்பதாகவும் பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் மேலும் தெரிவித்தார்.

பிரித்தானிய குடியுரிமையைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என புகார்கள் கிளம்பியுள்ளன.

அதனடிப்படையில், அவரின் பிரஜாவுரிமையை சவாலுக்குட்படுத்தி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments