05 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் தாய்மார், வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த தீர்மானம்

🕔 October 26, 2022

ந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்போது குறித்த சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதை மீளாய்வு செய்யவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக குழந்தைகள் உரிமை அமைப்புகள் மற்றும் கல்வியாளர்கள் சமர்ப்பித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு, இந்த திருத்தத்தை அமல்படுத்த அமைச்சு முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டுப் பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு 05 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான ‘குடும்பப் பின்னணி அறிக்கை’ சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேவையை, கடந்த ஜுன் மாதம் அரசாங்கம் இல்லாமல் செய்யும் வகையில் அமைச்சரவைத் தீர்மானமொன்றை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண்களும் வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்லலாம்: அமைச்சரவை தீர்மானம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்