மின்சாரக் கட்டணம் மேலும் 30 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிப்பு

🕔 October 26, 2022

மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) முன்மொழிவின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு மேற்கொள்படவுள்ளதாகவும் அந்தக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால், ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் – மின்சாரக் கட்டணத்துடன் சமூகப் பாதுகாப்பு வரியாக ரூபா 2.56 சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“சமூகப் பாதுகாப்பு வரியைச் சேர்ப்பது குறித்து மக்களுக்குத் தெரியாது. இது கட்டணப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் பட்டியலில் தனித்தனியாக காட்டப்படவில்லை”.

“எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, ஐஎம்எஃப் மேலும் 30% கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிந்துள்ளது. மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்