தன்னைக் கொல்ல முயற்சித்தவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஒப்புதலளித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

🕔 October 25, 2022

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை கொல்வதற்கு முயற்சித்த குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர்களுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று தமிழ் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு முன்னர், ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் ஒப்புதலைப் பெற்று, அவரின் அனுமதியைப் பெற்றதன் பின்னர், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

சந்திரிகா பண்டார நாயக்கவை கொலை செய்ய முயற்சித்த குற்றத்துக்கா சிறைத்தண்டனை அனுபவித்த மூவர் உட்பட, மொத்தம் 08 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

தொடர்பான செய்தி: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கொலை முயற்சி குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்