எடை குறைந்த பாண் விற்பனை செய்யப்பட்டால் 1977க்கு அறிவியுங்கள்: 01 லட்சம் ரூபா வரை தண்டம் விதிக்கப்படும்

🕔 October 25, 2022

குறைந்த எடையில் பாண் விற்பனை செய்வோரைக் கண்டறிய நாடு முழுவதும் அடிக்கடி சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறைந்த எடை கொண்ட பாண்களை விற்பனை செய்த 100 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“ஒரு பாணின் எடை 450 கிராம். குறைந்த எடையில் பாண்களை விற்கும் எந்தவொரு தனிப்பட்ட வணிக உரிமையாளருக்கும் ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் அதேவேளை, ஒரு நிறுவனத்துக்கு ரூ.10,000 முதல் ரூ.100,000 வரை அபராதம் விதிக்கப்படும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக விலைக்கு பாண்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான புகார்கள் இருந்தால், ‘1977’ என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தெரிவிக்குமாறும் மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்