வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது

🕔 October 25, 2022

வீட்டுத் தோட்டத்தில் சூட்சுமமான முறையில் 53  கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபர் ஒருவரை  சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அன்னமலை பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக  கிடைத்த ரகசிய தகவல் ஒன்றை அடுத்து, பொலிஸார் நேற்று திங்கட்கிழமை (24) தீபாவளி தினத்தன்று, நடத்திய தேடுதலில் சந்தேக நபரை கைது செய்தனர்.

இவ்வாறு கைதானவர் அன்னமலை பகுதியை  சேர்ந்த 58 வயதான  சந்தேக நபராவார். 

அவர் தனது வீட்டுத் தோட்டத்திலுள்ள பயிர்களுடன் சேர்த்து, 53  கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார் என, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் வந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்