கையொப்பமிட அனுமதிக்காமல், வெளியிலிருந்து ஆட்களை வரவழைத்து என்னைத் தாக்கினார்கள்: வைத்தியசாலையில் இருந்து, ஆசிரியை பஹ்மிதா வாக்குமூலம்

🕔 February 2, 2022

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு, தான் இன்று (02) கடமைக்குச் சென்றபோது, தனக்கு கையெழுத்திடுவதற்கான புத்தகத்தை தருவதற்கு நிர்வாகம் மறுத்து, தன்னை வெளியில் இருக்க வைத்ததாகவும், வெளியிலிருந்து ஆட்களை நிருவாகத்தினர் வரவழைத்து தன்னைத் தாக்கியதாகவும், வைத்தியசாலையில் அனுதிமதிக்கப்பட்டுள்ள ஆசிரியை பாத்திமா பஹ்மிதா தெரிவித்துள்ளார்.

தனது உரிமைக்காக சட்ட ரீதியாக தான் போராயடி நிலையில், நீதிமன்றமும் கல்வியமைச்சும் தீர்ப்பு வழங்கியுள்ள தருணத்தில், ஷண்முகா வித்தியாலயத்துக்கு தான் சென்றபோது, தன்னை அங்கிருந்தவர்கள் கடுமையாகத் தாக்கியதாகவும் ஆசிரியை பஹ்மிதா கூறியுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வழங்கிய குரல் பதிவிலேயே இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

ஷண்முகா வித்தியாலய நிர்வாகத்தினர் இன்று இவ்வாறான குழப்பகரமான நிலையை உருவாக்கி, தம்மை சிறந்தவர்களாகக் காண்பிக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

“இந்த சம்பவத்தில் நான் யாரையும் தாக்கவில்லை, ஷண்முகா வித்தியாலய நிர்வாகமும் பாடசாலைச் சமூகமும் கல்வி கற்றவர்கள் போல் நடந்து கொள்ளவில்லை. மென்மேலும் இனவாதத்தைத் தூண்டுவது போல் நடந்து கொள்கின்றனர்” எனவும் ஆசிரியை பஹ்மிதா தெரிவித்துள்ளார்.

ஆசிரியையின் குரல் பதிவு

தொடர்பான செய்தி: ஹபாயாவுடன் சென்ற ஆசிரியை மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி: திருகோணமலை ஷண்முகாவில் முடிவுக்கு வராத கலாசாரப் பயங்கரவாதம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்