தரமற்ற உரம் கொண்டு வந்த சீன நிறுவனத்துக்கு 140 கோடி ரூபா செலுத்தப்பட்டது

🕔 January 7, 2022

லங்கைக்கு தரமற்ற இயற்கை உரத்தைக் கொண்டுவந்த சீன நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் டொலர்கள் (இலங்கை பெறுமதியில் சுமார் 140 கோடி ரூபா) பணம் செலுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சேதன உரம், உரிய தரத்தில் இல்லாத நிலையில், அதனை அரசாங்கம் நிராகரித்திருந்தது.

இதனால் குறித்த உரம் – கப்பலில் இருந்து இறக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது.

இருந்தபோதும் இதற்கான கட்டணத்தை இலங்கை வழங்க வேண்டும் என்று சீன உர நிறுவனம் வலியுறுத்தி வந்தது.

அதேநேரம் குறித்த நிறுவனத்துக்கு கட்டணத்தை செலுத்துவதற்காக கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத் தடை அண்மையில் நீக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த சீன உர நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய 6.9 மில்லியன் டொலர்கள் பணம் இன்று செலுத்தப்பட்டுள்ளது.

Comments