அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக றபீக் சத்தியப் பிரமாணம்

🕔 December 28, 2021

– முன்ஸிப் அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் ஐ.எல்.எம். றபீக், இன்று (28) –  நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை கட்சிக் காரியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில், புதிய உறுப்பினர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற் குழு தலைவருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச மத்திய குழு செயலாளர் ஏ.எம். இர்பான், அந்தக் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.கே. அமீர், அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.எல். பசீல், கட்சியின் பாலமுனை மத்திய குழு செயலாளர் பாயிஸ் ஆசிரியர் உள்ளிட்ட பலர், இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கூட்ட அமர்வில் கலந்து கொள்வவதற்காக மேற்படி பிரமுகர்களுடன் சென்ற புதிய உறுப்பினர் றபீக் -ஐ, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். அஜ்மல் மாலையிட்டு வரவேற்றார்.

இந் நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக றபீக் நியமனம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்