பொது இடங்களில் நுழைய, கொவிட் தடுப்பூசி அட்டை அவசியம்: ஜனாதிபதி தலைமையில் தீர்மானம்

🕔 December 10, 2021

பொது இடங்களில் நுழைய – கொவிட் தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் என்று ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பொது இடங்களுக்குள் அனுமதிக்காதிருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கொவிட் தடுப்பு விசேட குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அட்டை இல்லாதவர்கள் எதிர்வரும் காலத்தில் பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என இன்று (10) தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கொவிட் தடுப்பு விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

பொது இடங்களுக்கு செல்லும் போது, தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அட்டையை கொண்டு செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதேவேளை, பூஸ்டர் தடுப்பூசியை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் செலுத்தி நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணித்துள்ளார்.

Comments