அரிசி கிலோ ஒன்றின் விலை 500 ரூபாவை தாண்டும் நிலை ஏற்படும்: அமைச்சர் ஷசீந்திர தெரிவிப்பு

🕔 December 10, 2021

நாட்டில் ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை 500 ரூபாவை விடவும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதென ராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னர் ஒரு டொன் (1000 கிலோகிராம்) யூரியா 278 அமெரிக்க டொல ருக்கு (இலங்கை பெறுமதியில் சுமார் 56393 ரூபா) இறக்குமதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஒரு தொன் யூரியாவின் விலை 1282 அமெரிக்க டொலராக (02 லட்சத்து 260059 ரூபா) அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விலையில் யூரியாவைக் கொண்டு வந்து விவசாயம் செய்தால் ஒரு கிலோ அரிசி விலை 500 ரூபாவைத் தாண்டும் எனவும், தற்போது இலங்கையில் 25 கிலோ யூரியா மூடை ஒன்று 9000 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது எனவும் அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்