அனுராதபுரம் சிறைச்சாலைச் சம்பவம்; 08 கைதிகள் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்: சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு

🕔 September 30, 2021

ராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த – அநுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கியைக் காட்டி கைதிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அடிப்படை உரிமை மீறல் வழக்கினை 08 தமிழ் அரசியல் கைதிகள் தாக்கல் செய்துள்ளனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மனுதாரர்கள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் ஆஜாரராகவுள்ளனர்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு கடந்த 12ஆம் திகதி சென்றிருந்த அப்போதைய சிறைச்சாலைகள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அங்கு தமிழ் கைதிகள் இருவரை முழங்காலிடச் செய்து, அவர்களின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்சியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனையடுத்து எழுந்த எதிர்ப்புகள் மற்றும் அழுத்தங்களை அடுத்து, சிறைச்சாலைகள் ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த ராஜிநாமா செய்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்