கல்முனை பிராந்தியத்தில் மட்டும், 115 வைத்தியர்கள் வேலைப் பகிஷ்கரிப்பு; முதியோர் , குழந்தைகள் கடுமையாகப் பாதிப்பு

🕔 December 3, 2015

004
– முன்ஸிப் –

ரசாங்க வைத்திய அதிகாரிகளின் வேலை நிறுத்தம் காரணமாக, அம்பாறை மாவட்டம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியால பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலைகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்கள் பெரும் ஏமாற்றங்களுடன் வீடு திரும்பினர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியால பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகள், நிலையங்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலங்களில் கடமையாற்றும் 115 வைத்தியர்களும் இன்றைய தினம் வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல். அலாவுத்தீன் தெரிவித்தார்.

மேற்படி வைத்தியர்கள் அனைவரும் இன்றைய தினம் வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமை காரணமாக, சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்த வெளி நோயாளர்கள் பெரும் ஏமாற்றங்களுடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலய பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், மூன்று ஆதார வைத்தியசாலைகளும், 11 பிரதேச வைத்தியசாலைகளும், 12 ஆரம்பப் பராமரிப்பு நிலையங்களும், 13 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களும் காணப்படுகின்றன.

இதேவேளை, இப்;பிராந்தியத்தில் பாலியல் தொற்று நோய் தடுப்பு நிலையம் ஒன்றும், மார்பு சிகிச்சைப் பிரிவு ஒன்றும் அமைந்துள்ளன.

இன்றைய தினம் வைத்தியர்கள் வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமை காரணமாக, மேற்படி அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் சிசிக்சை நிலையங்களிலும் வெளிநோயாளர்களுக்கான சிகிச்சைகள் மறுக்கப்பட்டிருந்தன.

எனினும், வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும் உள் நோயாளார்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சில வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் சமூகமளித்துள்ள போதிலும், வெளி நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்தமையினைக் காணக்கூடியதாக இருந்தது.

வயது முதிர்ந்தவர்கள் மற்றும் குழந்தைகளுடன் வைத்தியசாலைகளுக்கு வருகை தந்திருந்த தாய்மார்கள், மேற்படி வைத்தியர்களின் வேலை நிறுத்த நடவடிக்கையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டமையினை அவதானிக்க முடிந்தது. 001003002005

Comments

புதிது பேஸ்புக் பக்கம்