தீர்வையற்ற வாகன அனுமதி; இனி இரண்டு தடவை மாத்திரம்தான்: பிரதமர் அறிவிப்பு

🕔 December 3, 2015
Ranil - 0988ரசாங்க அதிகாரிகள் 10 வருடங்களுக்கு ஒரு தடவையே தீர்வையற்ற வாகனக் கொள்வனவுக்கான அனுமதிகளையே பெறமுடியும் என்று,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

அந்தவகையில், அரசாங்க அதிகாரியொருவர் தமது சேவைக் காலத்தில்  அதிகபட்சம் இரண்டு தடவை மாத்திரமே குறித்த வாகனக் கொள்வனவுக்கான அனுமதியைப் பெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தில் தீர்வையற்ற வாகனக் கொள்வனவுக்கான அனுமதி மறுக்கப்பட்டமையை அடுத்து, இன்று வியாழக்கிழமை அரசாங்க வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையிலேயே, அரசாங்க அதிகாரிகள் தமது சேவைக் காலத்தில்  இரண்டு தீர்வையற்ற வாகனக் கொள்வனவுக்கான அனுமதிகளையேபிரதமரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்