மஹிந்தவை தேடிய, ஐ.தே.க. எம்பி; நாடாளுமன்றில் சுவாரசியம்

🕔 December 3, 2015

Mahinda - 012
நா
டாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை, ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று நாடாளுமன்றத்தில் தேடிய விடயம் சுவாரசியத்துக்குள்ளானது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எங்கே? ஏன் அவர் வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமக நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் மஹிந்த அணியைப் பார்த்து கேள்வியெழுப்பினார்.

நளின் பண்டார எம்.பி. இவ்வாறு கேள்வியெழுப்பியதையடுத்து ஆளும்கட்சியினர் ‘ஊ’ சத்தம் எழுப்பி மேசையில் தட்டினர். இதேவேளை மஹிந்த ஆதரவு அணியினரும் கூச்சலிட்டனர். அத்துடன் பலத்த சிரிப்பொலியும் எழுந்திருந்தது.

வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட கடந்த 20 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சபைக்கு சமூகமளித்திருந்தார்.

எனினும், அதன்பின்னர் நேற்று புதன்கிழமை வரை ஒன்பது தினங்கள் இடம்பெற்ற விவாதங்களில் ஒரு தினமேனும் அவர் நாடாளுமன்றத்துக்கு சமூகமளித்திருக்கவில்லை.

இந்த நிலையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, மஹிந்த ராஜபக்ஷவைத் தேடி கேள்வியெழுப்பினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்