புகைப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்கும் சாத்தியம் அதிகம்

🕔 August 28, 2021

புகைப்பிடிப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்க அதிகளவில் சாத்தியமுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

புகைபிடித்தல் நுரையீரலின் செயல்பாட்டை பலவீனப்படுத்துகிறது என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கூறினார்.

மேலும், சிகரெட், சுருட்டு அல்லது வேறு வகையில் புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல் செயல்பாடு பலவீனம் அடைவதாகவும் விசேட வைத்தியர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறானவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படுவதனால், மிக விரைவாக கொவிட் நிமோனியா நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“புகைப்பிடிப்பவர்களுக்கு அருகாமையில் இருக்கும் குழந்தைகளின் நுரையீரலிலும் சிகரெட் புகையானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இவ்வாறான குழந்தைகளுக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டால் உடலில் கடுமையான நோய்கள் ஏற்பட்டு மரணம்கூட ஏற்படலாம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்