றிஷாட் பதியுதீனுடைய மாமனாருக்கு கொரோனா தொற்று: பிணை கோரிய சட்டத்தரணிகள்

🕔 August 27, 2021

றிஷாட் பதியூதீனின் மாமனாருக்கு (மனைவியின் தந்தை) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் தீ காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், றிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (27) தெரியவந்துள்ளது.

றிஷாட் பதியூதீனின் மாமனாருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால், அவரை பிணையில் விடுவிக்குமாறு, மனுவொன்றின் ஊடாக, அவரது சட்டத்தரணிகள் கொழும்பு மேலதிக நீதவான் லோச்சணி அபேவிக்ரமவிடம் இன்று கோரியிருந்தனர்.

எனினும், கொரோனாவை காரணம் காட்டி, சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முடியாது என கூறிய நீதவான்; சந்தேகநபருக்கு சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை திணைக்களத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில், றிஷாட் பதியூதீனின் மாமனாரின் பிணை மனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தமிழன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்