
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர காலமானார். அவருக்கு வயது 65 ஆகிறது.
கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த போது, இன்று செவ்வாய்கிழமை (24) அவர் மரணமானார்.
சிறுபான்மை மக்களுக்காக அதிகளவில் குரல் கொடுத்து வந்த மங்கள சமரவீர, பல ஆட்சி மாற்றங்களுக்கான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்டுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக களமிறங்கிய அவர், திடீரென தேர்தலில் வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டு, அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.



