றிசாட் பதியுதீன் கைதுக்கு எதிராக மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம்

🕔 April 29, 2021

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரை விடுதலை செய்யக் கோரியும், இரண்டாவது நாளாக இன்று வியாழக்கிழமை மன்னாரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சமூக இடைவெளிகளை பின்பற்றி, முகக் கவசம் அணிந்து, சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த, ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், முசலி பிரதேச சபை தவிசாளர் சுபிஹான் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராக, நேற்று வவுனியாலும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்