ஜும்ஆ, தராவீஹ் தொழுகைகளுக்கு தற்காலிகத் தடை: ஐவேளைத் தொழுகைகளில் 25 பேருக்கு மட்டும் அனுமதி

🕔 April 29, 2021

னைத்துப் பள்ளிவாசல்களிலும் தராவீஹ், ஜும்ஆ தொழுகைகள் மற்றும் பயான்கள், கியாமுல்லைல், இஃதிகாப் உள்ளிட்ட அனைத்து கூட்டுச் செயற்பாடுகளும் தற்காலிகமான நிறுத்தப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை 25 பேர் கலந்து கொள்ளும் வகையில், ஐவேளை ஜமாஅத் தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஜமாஅத் தொழுகையின் போது முக மறைப்பான்களைப் பயன்படுத்துவதோடு, ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணல், தனி விரிப்புக்களைப் பயன்படுத்துதல் மற்றும் வீட்டிலிருந்து வுழு செய்து வருதல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் திணைககளம் வலியுறுத்தியுள்ளது.

மேலுள்ள விடயங்களைப் பின்பற்றுவது சிரமம் என்றால், பள்ளிவாசல்களை மூட- நிருவாகத்தினருக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களை மூடிவைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்