வீதி நடுவில் சாரதி ஒருவரை தாக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்: பேஸ்புக் இல் வெளியானது வீடியோ

🕔 March 29, 2021

வீதிப் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், நபரொருவரைத் தாக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியொ ஒன்று பேஸ்புக் இல் வெளியாகி உள்ளது.

போக்குவரத்து கடமையில் இருந்ததாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், வீதியின் நடுவில் – நபரொருவரைத் தாக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

மஹரகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே, லொறி சாரதி ஒருவரை இவ்வாறு தாக்கியதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவரவில்லை. பன்னிப்பிட்டிய பகுதியிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்