45 கிலோகிராம் ஹெரோயினுடன் ராணுவ சிப்பாய் உள்ளிட்ட இருவர் கைது

🕔 February 25, 2021

ராணுவ சிப்பாய் ஒருவரும், ராணுவத்தை விட்டு விலகிய ஒருவரும் 45 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்று வியாழக்கிழமை காலை ஹொரன பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பாணந்துறை அலுவலக அதிகாரிகள் மேற்படி நபர்களை கைது செய்தனர்.

ராணுவ வாகனத்துக்குரிய போலி இலக்கத் தகட்டைக் கொண்ட வேன் ஒன்றிலிருந்து குறித்த 45 கிலோகிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படும் போது குறித்த சந்தேக நபர் – ராணுவ சீருடையில் இருந்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்