கொரோனாவை துல்லியமாக கண்டறியும் நாய்கள்: ஜேர்மன் கால்நடை மருத்துவமனை பயிற்சி

🕔 February 7, 2021

னித உமிழ்நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸை 94 வீதம் துல்லியத்துடன் கண்டறிவதற்கு, ஜேர்மன் கால்நடை மருத்துவமனையொன்று நாய்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் உயிரணுக்களிலிருந்து வரும் ‘கொரோனா வாசனையை’ அடையாளம் காண்பதற்கு இந்த நாய்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன என்று, ஜெர்மனியின் ஆயுதப்படை கல்லூரியில் நாய்களுக்கு சேவை வழங்கும் கால்நடை மருத்துவர் எஸ்தர் ஷால்கே கூறியுள்ளார்.

கொரோனாவை கண்டறியும் ஃபிலோ எனும் 03 வயதான பெல்ஜிய ஷெப்பர்ட் மற்றும் ஜோ கொக்கர் எனும் 01 வயது காக்கர் ஸ்பானியல் ஆகிய மேற்படி நாய்கள், கால்நடை மருத்துவத்துக்கான பல்கலைக்கழகத்தில் பயிற்சிகளைப் பெற்றுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்