எரிப்பதற்கு ஒப்புதலில்லை, சவப்பெட்டி கிடைக்கவில்லை: பிரேதங்களை வைத்துக் கொண்டு தடுமாறுகிறது அரசு

🕔 November 30, 2020

றுதி சடங்குகளுக்கு உறவினர்கள் ஒப்புதல் அளிக்க மறுத்ததால், கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் நீண்ட நாட்களாக கொழும்பில் உள்ள பொலிஸ் – பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக, அருண பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரேதங்களை தகனம் செய்வதற்கு குடும்ப உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்காமையினாலும், சவப்பெட்டிகளை வழங்க மறுத்ததன் காரணமாகவும் பிரேத அறையில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் சுகாதார வழிகாட்டுதல்களின்படி, மரணித்து 24 மணி நேரத்துக்குள் தகனம் செய்யப்பட வேண்டும். ஆயினும் மேற்படி காரணங்களால் குறிப்பிட்ட ஐந்து உடல்களை தகனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் பிரேத அறையில் உள்ள மேற்படி சடலங்களில் இரண்டு பிரேதங்கள் கொழும்பு – 02 பகுதியைச் சேர்ந்தவை. , ஏனைய பிரேதங்கள் மாளிகாவத்தை, மருதானை மற்றும் கோட்டே பகுதிகளைச் சேர்ந்தவை எனத் தெரியவருகிறது.

கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கும், சவப்பெட்டி வழங்குவதற்கும் முஸ்லிம்கள் மறுப்புத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்