ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான வழக்கினை முன்னெடுக்க முடியும்; பிரதம நீதியரசர் தெரிவிப்பு

🕔 November 2, 2015

Mithiripa sirisena - 096னாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கு ஒன்றினை, சட்டரீதியாக முன்னெடுக்க முடியுமென்று பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார்.

நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் மைத்திரிபால சிறிசேனவும் விசாரிக்கப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியுமெனவும் பிரதம நீதியரசர்  இதன்போது கூறினார்.

நாட்டின் ஒரு அமைச்சர் என்கிற முறையில் ஜனாதிபதிக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையை முன்னெடுக்க முடியுமென்றும் பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதத்தை பிரதம நீதியரசர் நிராகரித்தார்.

இதையடுத்து இந்த மனு தொடர்பான விளக்கத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சில அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்