பெரிய பணிகள் விமானத்தினை உள்நாட்டில் தயாரித்து சீனா சாதனை

🕔 November 2, 2015

China - 097
சீ
னா உள்நாட்டிலேயே பெரிய பயணிகள் விமானத்தை முதல் முறையாக உற்பத்தி செய்துள்ளது.

போயிங், ஏர்பஸ் ஆகிய மிகப்பெரிய விமான உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு, சீனா இதன் மூலம் சவால் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெரிய பயணிகள் விமானத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ததன் மூலம், சீனாவின் கனவு நிறைவேறியுள்ளதாக சீன வர்த்தக விமான கூட்டுத்தாபனத் தலைவர் ஜின் ஸுவாங்லாங் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

“சீனா தயாரித்துள்ள சி-919 என்ற இந்த விமானம் ஒரு குறிப்பிடத்தகுந்த மைல்கல் ஆகும். இது சீனாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு பயணிகள் விமானம் ஆகும்” என்றார்.

158 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த விமானம் சுமார் 4,075 கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்கக் கூடியதாகும். 2016 ஆம் ஆண்டு இதன் வெள்ளோட்டம் நடைபெறவுள்ளது.

வர்த்தகப் போக்குவரத்துக்கு இந்த விமானம் அனுமதி பெற்ற பிறகு, மேம்படுத்தப்பட்ட ஏர்பஸ் 320 மற்றும் போயிங்கின் புதிய தலைமுறை 737 விமானம் ஆகியவற்றுடன் போட்டியில் இறங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, சீன வான்வழித் துறை நிபுணர்களுக்கு அந் நாட்டு அதிபர் ஸீ ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, முதல் முறையாக இந்த விமானம் பறப்பதற்கு கவனமான முறையில் ஏற்பாடு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்