நுவரெலியா ஹாவஎலிய ஜும்ஆ பள்ளிவாசல் வெள்ளத்தில்; தொழுகை நடத்துவதிலும் சிரமம்

🕔 November 2, 2015

Mosque - Nuwaraliya - 01
– க. கிஷாந்தன் –

நுவரெலியா ஹாவஎலிய ஜும்ஆ பள்ளிவாசலில் வெள்ளம் புகுந்துள்ளமையினால், அங்கு தொழுகை நடத்தவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நுவரெலியா ஹாவஎலிய பகுதியில் இன்று திங்கட்கிழமை  மாலை  பெய்த கடும்மழை காரணமாக, அப்பகுதியில் உள்ள சிறிய ஆறு ஒன்று பெருக்கெடுத்தது.

இதனால், ஏற்பட்ட வெள்ள நீர், அப்பகுதியிலுள்ள ஜும்மா பள்ளிக்குள்ளும் புகுந்தது. இதன் காரணமாக தொழுகை நடத்துவதில் இடர்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும்,அப்பகுதியிலுள்ள சில வீடுகளுக்கும் வெள்ளநீர் புகுந்துள்ளது.

இடைவிடாது பெய்துவரும் மழை காரணமாக, நுவரெலியா மாவட்டத்தில் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.Mosque - Nuwaraliya - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்