அட்டாளைச்சேனைக்கு 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளேன்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவிப்பு

🕔 May 31, 2020

ட்டாளைச்சேனையின் அபிவிருத்திகளுக்காக, கடந்த ஆட்சியில் மட்டும் 19 கோடி ரூபா நிதியை – தான் ஒதிக்கியுள்ளதாக, முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார்.

‘புதிது’ செய்தித்தளத்தின் ‘சொல்லதிகாரம்’ – நேர்காணல் நிகழ்சியில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இந்தத் தகவலைக் கூறினார்.

இதைத்தவிர அட்டாளைச்சேனை வைத்தியசாலை அபிவிருத்திக்காக 35 மில்லியன் ரூபா நிதியை தான் வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கம்பரலிய திட்டத்தின் கீழ் – வீதிப் புனரமைப்புக்காக அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் காங்கிரஸின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 02 மில்லியன் ரூபாவினையும், உள்ளுராட்சித் தேர்தலில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றியடைய முடியாதவர்களுக்கு தலா 01 மில்லியன் ரூபாவினையும் தான் வழங்கியதாகவும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் கூறினார்.

இவ்வாறு வழங்கிய நிதி 200 மில்லியன் ரூபா எனவும் அவர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் மப்றூக் நடத்திய மேற்படி சொல்லதிகாரம் நேர்காணல் நிகழ்ச்சியை, நாளை திங்கட்கிழமை இரவு ‘புதிது’ செய்தித்தளத்திலும், ‘புதிது’ செய்தித்தளத்தின் ‘பேஸ்புக்’ பக்கத்திலும் நீங்கள் காணலாம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்