தேர்தல் தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத் தேவையில்லை: ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு

🕔 April 9, 2020

பொதுத் தேர்தல் பற்றியோ,நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாகவோ உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத்தேவையில்லை என தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயயசுந்தர அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்க​லை தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலை பெற்றுக்கொள்வது தகுதியானது என, ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வாரம் அறிவித்திருந்தது.

இம்மாதம் 25ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்படுத்திய அசாதாரண சூழ்நிலை காரணமாக தேர்தல நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போனது.

மேலும், மே மாதம் 14ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்தே, குறித்த திகதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாத நிலை உள்ளதால், அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழிகாட்டலைப் பெற்றுக் கொள்ளுமாறு, ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்