இஸ்லாத்தின் அடிப்படையில் ‘கெட்ட மரணம்’ என்றால் என்ன?

🕔 April 2, 2020

– ஜவ்ஸி அப்துல் ஜப்பார் –

ந்த நாட்களில் சமூக வலைத் தளங்களில் பலரும் ‘கெட்ட மரணம்’ என்பது, மரணித்த பின்னர் ஒருவரின் சடலத்துக்கு நடக்கும் இறுதிக் கிரியையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் ஒரு விடயம் என்பது போல் பதிவிடுகின்றனர். அதற்கும் மேலாக அப்படியான மரணம் தனக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்று பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஆமின் கூறுகின்றனர்.

இது முற்றிலும் இஸ்லாமிய வழிகாட்டல்களுக்கு நேர் முரணான நிலைப்பாடாகும். மாறாக ஜனாஸாவுக்குரிய கடமைகள் எதுவும் இடம் பெறாத ஒரு மரணம் மிகச் சிறந்த ஒரு மரணமாக இருக்கக் கூடும்

புனித யுத்தம், புனித ஹஜ் பயணம் என்பன வற்றில் ஏற்படும் மரணங்கள் மட்டுமன்றி அங்கிகரிக்கப்பட்ட எந்தவிடயத்திற்காகவும் (கல்வி, வியாபாரம் போன்றவை) ஒருவர் வெளிக்கிளம்பி செல்லும் போது ஏற்படும் விபத்துக்கள், வழிப்பறிக் கொள்ளை போன்றவற்றால் ஏற்படும் மரணம் மற்றும் நீரில் மூழ்குதல், தீயில் எரிந்து போதல் அல்லது உயிருடன் அல்லது சடலமாக தீயில் இட்டு எரிக்கப்படல் போன்ற மரணங்கள் ஷஹித் உடைய அந்தஸ்தை உடையவை என்று ஹதீத்கள் குறிப்பிடுகின்றன.

அது மட்டுமன்றி ஒருவர் கொலை, கொள்ளை வழிப்பறி என்பனவற்றின் போது தன்னையோ தனது சொத்துக்களையோ காத்துக் கொள்ள போராடும் போது ஏற்படும் மரணமும் ஷஹீத் அந்தஸ்துடையதாகும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தற்போது ஏற்பட்டுள்ள கொள்ளை நோய் போன்ற நோய்கள் ஏற்படும் போது ஏற்படும் மரணமும் ஷஹீத் அந்தஸ்தை உடையது.

கெட்ட மரணம் என்பது ஒருவரின் உடலை விட்டு – உயிர் பிரியும் போது அவர் இருக்கும் நிலையைப் பொறுத்ததாகும்.

விபச்சாரம், போதை மற்றும் களவு போன்ற பாவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மரணித்தல், தற்கொலை, தொழுகை இல்லாத நிலையில் மரணித்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

குறிப்பு: சிலர் வெளியிடும் அபத்தமான கருத்துக்களை சகித்துக் கொண்டிருக்க முடியமால் இடப்படும் ஒரு பதிவு மட்டுமே இது . நான் மார்க்கத்தை துறை போக கற்ற ஓர் அறிஞன் அல்ல. ஆகவே இதில் பிழைகள் ஏதும் இருந்தால் ஆதாரங்களுடன் குறிப்பிப்பிட்டால் திருத்திக் கொள்கிறேன்.

இயலுமானவர்கள் இங்கே குறிப்பிடப் பட்ட விடயங்களுக்கான ஹதீஸ்களை பதிவிடுங்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்