அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதேச சபை அலட்சியமாகச் செயற்படுவதாக மக்கள் விசனம்

🕔 March 18, 2020

– அஹமட் –

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன் ஆயத்த நடவடிக்கைள் எவற்றிலும் இதுவரையில் அட்டாளைச்சேனை பிரதேச சபை ஈடுபடவில்லை என, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளிலுள்ள முடி திருத்தும் கடைகள் (Saloon)கள் தொடர்ந்தும் இயங்கி வருகின்ற போதிலும், அவற்றினை மூடுவதற்கான நடவடிக்கைகளை இதுவரை பிரதேச சபையினர் எடுக்கவில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர்.

நோய்த் தொற்று ஏற்படுவதற்கான அதிகபட்ச சாத்தியமுள்ள இடங்களில் முடி திருத்தும் நிலையங்களும் அடங்கும்.

இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள ஹோட்டல்களில் உணவு பரிமாறுவோர் கையுறைகள் மற்றும் முக மூடிகள் அணியாமலேயே தமது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இது தொடர்பில் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றபோதிலும், உள்ளுர் மட்டங்களிலுள்ள இவ்வாறான தரப்பினரின் அலட்சியப்போக்கு காரணமாக, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வெற்றியளிக்காமல் போகும் நிலை ஏற்படலாம் எனவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்