பொதுத் தேர்தல்: முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் 06 பேர் போட்டி

🕔 March 18, 2020

– முன்ஸிப் –

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் 06 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் நேற்று செவ்வாய்கிழமை இரவு வேட்பு மனுவில் கையெழுத்திட்டதாக அறிய முடிகிறது.

முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நஸீர், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸித் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் ஆகியோரே முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றனர்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளதோடு, ஐக்கிய தேசியக் கட்சியும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments