மு.கா. தலைவரின் ரகசியங்கள், மன்சூரிடம் சிக்கியுள்ளன: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் தெரிவிப்பு

🕔 March 10, 2020

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் பற்றிய ரகசியங்கள், அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரிடம் சிக்கியிருப்பதாகவும், அதனால் மன்சூரை மீறி, மு.கா. தலைவர் எதுவும் செய்ய மாட்டார் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டொன்றினை கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் முன்வைத்துள்ளார்.

‘புதிது’ செய்தித்தளம் ஆரம்பித்துள்ள ‘சொல்லதிகாரம்’ எனும் நேர்காணல் நிகழ்சியில் கலந்து கொண்டபோதே, இந்தக் குற்றச்சாட்டை அவர் கூறினார்.

அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர், மணல் ‘மாபியா’ வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் மாஹிர் குற்றம்சாட்டினார்.

மறுபுறமாக, ‘மொட்டுக் கட்சி’ எனும் பொதுஜன பெரமுனவின் ஏஜென்டாகவே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா பணிக்கமர்த்தப்பட்டுள்ளதாக கூறிய மாஹிர்; அம்பாறை மாவட்டத்தில் மொட்டுக் கட்சியின் ஊடாக முஸ்லிம்கள் எவரும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகும் வாய்ப்பு இல்லை என்றும் சொன்னார்.

முஸ்லிம் காங்கிரஸிருந்து – தான் அண்மையில் விலகியமைக்கான காரணம் என்ன என்பதையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொள்வதற்கு முன்னர், தன்னை அதாஉல்லா அணியினர் அவர்களின் கட்சியில் சேருமாறு அழைத்ததாகவும், அவருடன் இணைந்து கொள்ளாமைக்கான காரணம் என்ன என்பதையும் இந்த நேர்காணலில் மாஹிர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் மப்றூக் தொகுத்தளித்த – குறித்த நேர்காணலை, கீழே முழுமையாகக் காணலாம்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்