உள்ளுர் வியாபாரிகள் நெல் கொள்வனவில் மோசடி: அம்பாறை மாவட்ட விவசாயிகள் புகார்

🕔 January 14, 2020

– அஹமட் –

ம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், தமது நெல்லுக்கு உள்ளுர் வியாபாரிகளிடமிருந்து உரிய விலையைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், கடந்த போகத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை விளைச்சல் குறைவடைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

ஆயினும் இம்முறை எப்போதுமில்லாத அளவு நெல்லுக்கான விலை சந்தையில் அதிகரித்துள்ளதுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது அறுவடை செய்யப்படும் 66 கிலோகிராம் கொண்ட ஒரு மூடை புதிய நெல், சந்தையில் 3800 ரூபா வரையில் விற்பனையாவதாக விவசாயிகள் கூறுகின்ற அதேவேளை, உள்ளுர் நெல் கொள்வனவாளர்களும், அரிசி ஆலை உரிமையாளர்களும், தமது நெல்லை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், தமது நெல்லை விற்பனை செய்கையில், அதனைக் கொள்வனவு செய்யும் உள்ளுர் வியாபாரிகள் – நிறை அளவீடுகளிலும் தமக்கு அநீதி செய்வதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

எனவே, இது விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி, தமது நெல்லை உரிய விலைக்கு கொள்வனவு செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

நெல் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் முன்னணி வகிக்கும் மாவட்டங்களில் அம்பாறை மாவட்டமும் ஒன்றாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்