ரஞ்சன் ராமநாயக்கவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

🕔 January 15, 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிணங்க எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் அவர் விளக்க மறியலில் வைக்கப்படவுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று மதியம் நுகேகொட நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

ரஞ்சன் ராமநாயக்க நேற்று செவ்வாய்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் அவர் கொழும்பு குற்றதடுப்பு பிரிவுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்த்தது.

நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவிற்கு அமையவே ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டார்.

நீதிபதிகளின் நடவடிக்கைகளில் தலையிட்டமை மற்றும் அச்சுறுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரின் உத்தரவுக்கு அமையவே ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டார்.

Comments