கல்முனை பிரச்சினையிலிருந்து ஹக்கீம் ஒதுங்க வேண்டும்: வை.எல்.எஸ். ஹமீட் வேண்டுகோள்

🕔 November 10, 2019

– வை எல் எஸ் ஹமீட் –

ல்முனைப் பிரச்சினை தொடர்பில் மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை கல்முனையில் ஆற்றிய உரை தமக்கு விரக்தியை ஏற்படுத்தியிருப்பதாக சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருக்கு (மு.காங்கிரஸ் பிரதித் தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ்) திராணியிருந்தால், ஹக்கீமை ஒதுக்கிவைத்துவிட்டு, கல்முனைப் பிரச்சினையைத் தீர்க்க முன்வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அல்லாஹ்வுக்காக கல்முனைப் பிரச்சினையில் இருந்து ஹக்கீம் ஒதுங்கியிருக்க வேண்டும் என்றும் ஹமீட் வேண்டியுள்ளார்.

‘ஹக்கீமின் கல்முனை விரோத செயற்பாட்டால், ஹக்கீமின் தலைமைத்துவ மாற்றத்திற்கான போராட்டம் கல்முனையில் இருந்து ஆரம்பிக்கின்ற ஒரு சூழ்நிலையை ஹக்கீம் ஏற்படுத்தவேண்டாம்.

அடுத்த அமைச்சர் (ராஜாங்க அமைச்சர் பைஸால் காசிம்) மனச்சாட்சியை அடகுவைக்காமல் கல்முனையைப் பாதுகாக்க கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

அந்த அமைச்சருக்கு (பைஸால் காசிம்) கடந்த பொதுத்தேர்தலில் நான் முன்னின்று கல்முனையில் சுமார் ஐயாயிரம் வாக்குகள் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம்.

எனவே, அவருக்கு கல்முனையைப் பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கிறது. அதனை அவர் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் செய்யவேண்டும்’ என்றும், வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் இவற்றினை அவர் பதிவு செய்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்