ரஊப் ஹக்கீம் வீட்டில் 60 லட்சம் ரூபாய் திருட்டு; மனைவி சானாஸ் பொலிஸில் முறைப்பாடு

🕔 July 29, 2019

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வீட்டிலிருந்து 60 லட்சம் ரூபா பணம் திருட்டுப் போயுள்ளதாக கொழும்பு – கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரஊப் ஹக்கீமுடைய மனைவி சானாஸ் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

தமது வீட்டிலிருந்த பணம் காாணமல் போனதாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் சானாஸ் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், குறிப்பாக ரஊப் ஹக்கீமுடைய வீட்டுப் பணியாளர்கள் தொடர்பில் தாம் விசேட கவனம் செலுத்தியள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்